

1,000+ பேர் பல்வேறு Inner Peace Meditation பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர்.
வாராந்திர ஜூம் வகுப்புகள் மூலமாக இணைய வழி பயிற்சி
தியானப் பயிற்சி மற்றும் வாழ்வியல் தொடர்பான சிறப்பு கேள்வி - பதில் நேரம்
எங்கிருந்தும் தினமும் பயிற்சி செய்ய பதிவு செய்யப்பட்ட வகுப்புகள், மொபைல் செயலி
தினசரி, வாராந்திர, மாதாந்திர சவால்கள் மூலமாக அமைதியை வளர்த்தெடுப்போம்
பலர் தியானத்தை கற்றுக்கொள்கிறார்கள். சில நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்கிறார்கள். ஆனால் வாழ்க்கையின் வேகம் அதிகரிக்கும்போது, தியானப் பயிற்சியும் மெதுவாக நின்றுவிடுகிறது.
தியானத்தை தொடர்ந்து செய்வதற்கு கற்றல் மட்டுமல்ல... வழிகாட்டுதல், ஊக்கம், பயிற்சி செய்வதற்கான சூழல் மற்றும் தொடர்ச்சியான ஈடுபாடும் தேவைப்படுகிறது.
அதற்காகத்தான் இந்த 365 நாள் அக அமைதி தியானப் பயணம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் அல்லது சில நாட்கள் தியானம் செய்வதைவிட, அதை தொடர்ந்து வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதே இந்தப் பயணத்தின் நோக்கம்.
வாராந்திர ஜூம் வழி பயிற்சி, சிறப்பு Q&A, பதிவு செய்யப்பட்ட வகுப்புகள், தினசரி பயிற்சி மற்றும் பல்வேறு சவால்களின் மூலம், உங்கள் தியானப் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள உதவும் ஒரு பயிற்சி சூழலை இந்த Membership வழங்குகிறது.
🧘 கற்றல்
தியானம் மற்றும் மனதைப் புரிந்துகொள்வதற்கான பல்வேறு பயிற்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட உள்ளடக்கங்கள்.
🔄 தொடர்ச்சியான பயிற்சி
தினசரி, வாராந்திர மற்றும் நீண்ட நேரப் பயிற்சிகள் மூலம் தொடர்ந்து பயிற்சி செய்யும் வாய்ப்பு.
🤝 வழிகாட்டுதல்
வாராந்திர Live பயிற்சி மற்றும் சிறப்பு Q&A மூலம் உங்கள் கேள்விகளுக்கு வழிகாட்டுதல்.
உங்கள் வசதியான நேரத்தில் தொடர்ந்து தியானம் செய்வதற்கான பதிவு செய்யப்பட்ட பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜூம் வழி தியானப் பயிற்சியும், காலை 6:00 முதல் 6:30 வரை சிறப்பு Q&A அமர்வும் நடைபெறும்.
வாராந்திர, மாதாந்திர மற்றும் சிறப்பு சவால்களின் மூலம் தொடர்ந்து பயிற்சி செய்ய ஊக்கமும் ஈடுபாடும் உருவாக்கப்படுகிறது.

தியானம் ஒரு தனிப்பட்ட பயிற்சியாக மட்டும் இல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் உதவும் ஒரு வாழ்வியல் பயணமாக இருக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக தியானத்தைப் பயிற்சி செய்து, பல்வேறு மனிதர்களுடன் பணியாற்றியபோது ஒரு விஷயத்தை நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.
தியானத்தைப் பற்றி தெரிந்துகொள்வது ஒரு விஷயம்.
அதை தொடர்ந்து செய்து, அதன் மூலம் நம்முள் ஏற்படும் மாற்றங்களை நாமே கவனித்து, அதை நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது முற்றிலும் வேறு விஷயம்.
குறிப்பாக இன்றைய Information Age, AI மற்றும் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தியான முறைகளை வெறுமனே கற்றுக்கொள்வது மட்டும் போதாது.
“இந்தப் பயிற்சி எனது வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுகிறது?”
“நான் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் என்ன மாற்றத்தை கவனிக்கிறேன்?”
“அந்த மாற்றத்தை எப்படி புரிந்துகொள்வது?”
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை, ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் பயணம் உருவானது.
அதற்காகத்தான் புரிந்துகொள்ளுதல் → செய்து பழகுதல் → தொடர்ந்து செய்வதற்கான கட்டமைப்பு → கேள்விகளுக்கான வழிகாட்டுதல் → மீளாய்வு மூலம் நம்முடைய மாற்றங்களை நாமே கண்டறிதல் என்ற ஐந்து கட்ட அணுகுமுறையை உருவாக்கினோம்.
தியானத்தை கற்றுக்கொள்வது மட்டும் அல்ல…
தியானம் உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்களே கண்டறியும் ஒரு பயணம்.
தொடர்ந்து தியானம் செய்வதற்கும், உங்கள் பயிற்சியை ஆழப்படுத்துவதற்கும் தேவையான பல்வேறு பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் சவால்கள் ஒரே உறுப்பினர் திட்டத்தில்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 5:00 முதல் 6:00 மணி வரை ஜூம் வழி தியானப் பயிற்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்யலாம்.
காலை 6:00 முதல் 6:30 மணி வரை சிறப்பு Q&A அமர்வு. உங்கள் தியானப் பயிற்சி தொடர்பான கேள்விகளுக்கு வழிகாட்டுதல் பெறலாம்.
1 நாள் ஆனா பானா சதி தியானப் பயிற்சி, 3 நாள் மற்றும் 10 நாள் ஆனா பானா சதி தியானம் + விபாசனா பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பதிவு செய்யப்பட்ட பயிற்சிகளை உங்கள் நேரத்திற்கேற்ப மேற்கொள்ளலாம்.
Android மற்றும் iOS மொபைல் செயலிகள் மூலம், நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு வசதியான நேரத்தில் பயிற்சி உள்ளடக்கங்களை அணுகலாம்.
தொடர்ந்து தியானம் செய்ய விரும்பும் மற்ற பயிற்சியாளர்களுடன் இணைந்து, ஒரு பயிற்சி சமூகத்தின் பகுதியாக உங்கள் பயணத்தைத் தொடரலாம்.
உங்கள் தினசரி தியானப் பயிற்சி அனுபவத்தை பதிவு செய்து, உங்கள் செயல்பாடுகளுக்கான Points-ஐப் பெறலாம். இதன் மூலம் உங்கள் தொடர்ச்சியான பயிற்சியை கண்காணிக்கலாம்.
வாராந்திர, மாதாந்திர மற்றும் சிறப்பு தின சவால்களில் கலந்து கொண்டு, சிறப்பாக தொடர்ந்து பயிற்சி செய்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகளை பெறும் வாய்ப்பு.
மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், ஆனா பானா சதி தியானம் மற்றும் விபாசனா பயிற்சியை ஆழப்படுத்தவும் உதவும் பல்வேறு பதிவுகள் மற்றும் கற்றல் வளங்களைப் பெறலாம்.
Mahe Tech Academy இணையதளத்தில் வெளியிடப்படும் சிறப்பு கட்டுரைகள், Blog பதிவுகள் மற்றும் தொடர்புடைய பயிற்சி வளங்களை, Membership காலத்தில் கூடுதல் கட்டணமின்றி அணுகலாம்.

கற்றுக்கொள்வதைத் தாண்டி... தொடர்ந்து பயிற்சி செய்வதற்கான ஒரு பயணம்.
ஓராண்டு பயணத்தின் போது ஒரே முறையில் மட்டும் பயிற்சி செய்ய வேண்டியதில்லை. உங்கள் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப பல்வேறு கால அளவுகளில் பயிற்சி செய்து, தொடர்ந்து உங்கள் பயிற்சியை வளர்த்துக்கொள்ளலாம்.

ஆனா பானா சதி தியானத்தின் மூலம் ஒரு நாள் முழுமையான பயிற்சியை மேற்கொண்டு, தொடர்ந்து பயிற்சி செய்யத் தொடங்கலாம்.

ஆனா பானா சதி தியானம் மற்றும் விபாசனா பயிற்சிகளை இணைத்து, மூன்று நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்து பார்க்கலாம்.

ஆனா பானா சதி தியானம் மற்றும் விபாசனா பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, நீண்ட கால பயிற்சிக்கான அனுபவத்தைப் பெறலாம்.

தியானப் பயிற்சியில் ஏற்படும் அனுபவங்களையும் மாற்றங்களையும் கவனித்து அறிந்துகொள்வதற்காக, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மீளாய்வு பயிற்சி உங்களுக்கு வழிகாட்டுகிறது.
தொடர்ச்சியான பயிற்சியை ஒரு ஊக்கமளிக்கும் பயணமாக மாற்ற, வாராந்திர, மாதாந்திர மற்றும் சிறப்பு நாட்களில் பல்வேறு சவால்கள் நடத்தப்படுகின்றன.
தொடர்ந்து பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்க்கும் வாராந்திர சவால்கள்.
ஒரு மாதம் முழுவதும் தொடர்ந்து பயிற்சி செய்பவர்களை ஊக்குவிக்கும் சிறப்பு சவால்கள்.
சிறப்பு நாட்களில் அதிக நேரம் பயிற்சி செய்யும் வாய்ப்புகள்.
உலக அமைதி, மக்களின் நலம் போன்ற நல்ல நோக்கங்களுக்காக இணைந்து சிறப்பு பயிற்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள்.
தனி மனிதனின் அக அமைதியை வளர்த்தெடுப்பதற்கான ஓராண்டு சிறப்பு சவால்கள். உதாரணம் - 365 நாளும் தினமும் 10 நிமிட தியானம்
நாம் கற்றறிந்து பயிற்சி செய்து பலனறிந்ததும் நம் உறவுகள் நண்பர்களுக்கு கற்றுக் கொடுக்கும் சவால். இது ஒரு சமூக நல்மாற்றத்திற்கான முயற்சி
25+Years Experience, Engineering, Research & Development, Training & Coaching மற்றும் பல ஆண்டுகால தியானப் பயிற்சி அனுபவத்தின் அடிப்படையில் உருவான ஒரு எளிய அணுகுமுறை.

Engineering துறையில் கல்வி பயின்று, தொழில்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும், Research & Development சார்ந்த பணிகளில் பெற்ற அனுபவமும், அதன் பின்னர் Training & Coaching துறையில் தொடர்ந்து பணியாற்றிய அனுபவமும், மனிதர்களின் வாழ்வில் உள்ள பல்வேறு சவால்களை நெருக்கமாக புரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கியது.
2017ஆம் ஆண்டு 10 நாள் விபாசனா பயிற்சியில் கலந்து கொண்ட அனுபவம், தியானத்தைப் பற்றிய எனது பார்வையில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த அனுபவத்திற்குப் பிறகு, 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தியானப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, பலரும் எளிமையாக கற்றுக்கொண்டு பயன் பெறுவதற்கான முயற்சிகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவான தியான முறைகளை, இன்றைய Information Age, AI மற்றும் வேகமான வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு எளிமையாக கற்றுக்கொண்டு, செய்து பார்த்து, அனுபவித்து, மீளாய்வு செய்து, நமது வாழ்வில் பயன்படுத்தக்கூடிய ஒரு நடைமுறைப் பயணமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கமே இந்த அணுகுமுறையின் அடிப்படை
தியானப் பயிற்சியின் செய்முறையை தெளிவாகப் புரிந்துகொண்டு, சரியான முறையில் பயிற்சி செய்யத் தொடங்குதல்.
தொடர்ந்து பயிற்சி செய்வதற்கான எளிய வழிமுறைகளின் மூலம் தியானத்தை ஒரு நடைமுறையாக மாற்றுதல்.
தினசரி வாழ்க்கையில் தொடர்ந்து பயிற்சி செய்வதற்கு தேவையான பழக்கங்களையும் கட்டமைப்புகளையும் உருவாக்குதல்.
பயிற்சி செய்யும்போது எழும் சந்தேகங்கள், அனுபவங்கள் மற்றும் வாழ்வியலில் பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு Priority Q&A மூலம் தொடர்ந்து விளக்கங்களைப் பெறுதல்.
தியானப் பயிற்சி எவ்வாறு செயல்படுகிறது?
அது நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் வாழ்வியலில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது?
என்பதை மீளாய்வு பயிற்சியின் மூலம் பதிவு செய்து, கவனித்து, நமது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் நாமே கண்டறியும் வழிமுறை.
தியானப் பயிற்சியின் அனுபவம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. தியானத்தைப் பற்றி கேட்பதைவிட, அதைத் தொடர்ந்து பயிற்சி செய்து அனுபவித்தவர்களின் வார்த்தைகள் உங்களுக்கு தெளிவான ஒரு பார்வையைத் தரலாம்.
ஆனா பானா சதி தியானம், விபாசனா தியானம் மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகளின் மூலம் பலர் தங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துள்ளனர். கீழே உள்ள அனுபவப் பகிர்வுகள், அவர்களின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை.

3 நாள் தியானப் பயிற்சி
“பின்பற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் எளிய வகையில் தியான முறைகளை கற்பித்தார் பயிற்சியாளர். மீளாய்வு, மதிப்புரைகள் மூலம் கற்ற தியான முறைகளை நன்கு அறிந்து கொண்டேன்.

10 நாள் தியானப் பயிற்சி
“பயிற்சிக்குப் பின் முழு அமைதியுடனும் புத்துணர்வுடனும் காணப்படுகிறேன். பயிற்சியாளர் மகேந்திரனுக்கு எனது வணக்கங்கள்.”

3 நாள் தியானப் பயிற்சி
“இந்தப் பயிற்சி ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ள வேண்டிய பயிற்சி. உள் நோக்கிய பயணம் அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் என்பதனை அறிந்து கொண்டேன்.”

10 நாள் தியானப் பயிற்சி
“ஆனா பானா சதி, விபாசனா தியானமுறை எனது உணர்வு நிலைகளில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியது. பெரும் தத்துவங்களை எளிமையாக புரிய வைத்தார் பயிற்சியாளர்.”

3 நாள் தியானப் பயிற்சி
நேர்மறை மாற்றத்தை தேடுவோர் அனைவருக்கும் உதவும் பயிற்சி. வாழ்வை மாற்றிடும் அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய தியானப் பயிற்சி

10 நாள் தியானப் பயிற்சி
10 நாள் தியானப் பயிற்சி இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ற வகையில் எளிமையானதாகவும் நேரடியாக எனது தினசரி வாழ்வில் நல்மாற்றங்களை தந்தது.

3 நாள் தியானப் பயிற்சி

3 நாள் தியானப் பயிற்சி
உங்களுக்கு கேள்விகள் உள்ளதா? அதற்கான பதில்களை இங்கே நீங்கள் பார்க்கலாம். இதைத் தவிர வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்கள் வாட்ச் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் உள்நோக்கிய தேடல் பயணத்தை இப்போதே துவங்க இப்போதே துவங்குகிறேன் பட்டனை அழுத்தவும்
இப்போதே துவங்குகிறேன்ஆம். அடிப்படையிலிருந்து எளிமையாக கற்றுக்கொண்டு, தொடர்ந்து பயிற்சி செய்வதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
தியானம் பற்றி முன் அனுபவம் இல்லாதவர்களும் இணையலாம். ஏற்கனவே தியானப் பயிற்சி செய்து வருபவர்களும் தங்கள் பயிற்சியை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பயிற்சி அனைவருக்குமானது.
ஆனா பானா சதி தியானம், விபாசனா தியானம், மீளாய்வு பயிற்சி, வாழ்வியலில் மேம்பாட்டிற்கான பயிற்சி. பயிற்சி செய்து பார்ப்பதற்கு 1, 3, 10 நாள் தொடர் பயிற்சி சவால்கள். தினசரி பயிற்சி செய்ய 10, 24, 48 நிமிட குரல் வழிகாட்டலோடு பயிற்சிகள். தத்துவ விளக்கங்கள். இன்னும் பல.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 5 - 6 மணி வரை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 6 முதல் 6.30 வரை
₹3,650 ஒரே தவணையாக செலுத்துவதற்கான வாய்ப்புடன், 5 தவணை முறையிலும் செலுத்தலாம். தவணை முறையில் மொத்தம் ₹4,650:
1வது தவணை — பதிவு செய்யும் நாள்
2வது தவணை — 10 நாளில்
3வது தவணை — 30 நாளில்
4வது தவணை — 60 நாளில்
5வது தவணை — 90 நாளில்
உறுப்பினர் திட்டத்தில் கிடைக்கும் பதிவு செய்யப்பட்ட பயிற்சிகளை உங்கள் வசதியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்யலாம்.
ஆம். Android மற்றும் iOS செயலிகள் மூலம் உங்கள் பயிற்சிகளை எங்கிருந்தும் அணுகி பயன்படுத்திக் கொள்ளலாம். மொபைல், கணிணி, மடிக்கணிணி இவற்றைப் பயன்படுத்தியும் browser மூலமாகவும் உள்நுழைந்து கற்கலாம்.
ஆம். உறுப்பினர்களுக்கான Community Access மூலம் தொடர்ந்து பயிற்சி செய்து, பிற பயிற்சியாளர்களுடன் இணைந்து பயணிக்கலாம்.
மீளாய்வு பயிற்சி மூலம் உங்கள் தியானப் பயிற்சியில் ஏற்படும் அனுபவங்களை பதிவு செய்து, காலப்போக்கில் உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை நீங்களே கவனிக்கக் கற்றுக்கொள்ளலாம். இது குறித்து கேள்விகள் இருந்தாலும் கேள்வி நேரத்தில் கேட்டு விளக்கம் பெறலாம்.
உங்கள் மனதிற்கும் சுதந்திரம் கொடுப்போம்.
ஒரே தவணையில் செலுத்த முடியாதவர்களுக்காக மட்டும்.
ஒரே தவணையில் செலுத்தும் போது ₹3,650.
5 தவணை முறையில் செலுத்தும் போது மொத்தம் ₹4,650.
Secured Payment | You can pay through All cards, bank accounts, UPI payments apps

365 நாள் அக அமைதி தியானப் பயணம்
இன்றே இணையுங்கள்.
₹10 / நாள்

அக அமைதியே அகிலத்தின் அமைதி
₹3,650 — ஒரே தவணை | ₹4,650 — 5 தவணை வசதி
அதேபோல், நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் வாழ்வியல் சவால்களுக்கு மத்தியில்
அக அமைதியை வளர்த்துக் கொள்வதும் ஒரு முக்கியமான தனிப்பட்ட பயணம்.
தொடர்ந்து கற்று, பயிற்சி
செய்ய..
பயிற்சி, மீளாய்வு, தத்துவ விளக்கங்கள் மூலமாக அனுபவப்பூர்வ அறிவை வளர்த்தெடுக்க
அக அமைதியை வளர்த்தெடுத்து வாழ்வியலை மேம்படுத்த