அக அமைதி தியானத்தின் பெண்களுக்கான 3 நாள் பதிவு செய்யப்பட்ட தியானப் பயிற்சி வகுப்பிற்கு உங்களை வரவேற்கிறேன்.
பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் | Mobile App | கட்டணமின்றி கூட்டுத் தியானப் பயிற்சி வகுப்பு & இணைய வழி தியான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு
3 நாள் பயிற்சிக்கு பதிவு செய்த உடன் நமக்கு என்ன கிடைக்கும்
பயிற்சி வகுப்பிற்கு நீங்கள் பதிவு செய்து கொள்ளும் நாள். இந்நாளில் பயிற்சி பற்றிய அறிமுக வகுப்பு துவங்கும்.
ஆனா பானா சதி தியான முறை அதில் உள்ள பல்வேறு வழிமுறைகளை கற்று பயிற்சி செய்வோம்.
ஆனா பானா சதியில் புதிய வழிமுறை மற்றும் விபாசனா தியான முறையை கற்று பயிற்சி செய்வோம்
வாழ்வியல் சவால்களை அடிப்படையாகக் கொண்டு விபாசனா - ஆனா பானா சதி தியான முறைகளைப் பயிற்சி செய்வோம்.
பயிற்சியை நிறைவு செய்து உங்களின் மூன்று நாள் பயிற்சியை மீளாய்வு செய்யும் நாள். அடுத்தடுத்த கட்டணமில்லா பயிற்சிகளுக்கு பதிவு செய்து கொள்ளும் நாள்
நமது இணைய வழி பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றவர்களின் பயிற்சி அனுபவங்களில் சில நொடிகளை இங்கு பகிர்ந்து உள்ளோம். உங்களின் அக அமைதியை வளர்த்தெடுக்கவும், வாழ்வியலை மேம்படுத்தவும் அக அமைதி தியானப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இவை உங்களுக்கு உதவியாக இருக்கலாம். ஆனாலும் என்னுடைய வேண்டுகோள் இது தான் " உங்களின் அக அமைதியை வளர்த்தெடுக்க, வாழ்வியலை மேம்படுத்த தியான முறைகள் உங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அந்த தேடல் உங்களுக்கு இருந்தால் மட்டுமே எங்களுடனான இந்த உள் நோக்கியத் தேடல் பயணத்தை தேர்ந்தெடுங்கள்"
அன்புடன் ரா.மகேந்திரன்
நேர்மறை மாற்றத்தை தேடுவோர் அனைவருக்கும் உதவும் பயிற்சி. வாழ்வை மாற்றிடும் அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய தியானப் பயிற்சி.
இந்தப் பயிற்சி ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ள வேண்டிய பயிற்சி. உள் நோக்கிய பயணம் அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் என்பதனை அறிந்து கொண்டேன்.
பயிற்சிக்குப் பின் முழு அமைதியுடனும் புத்துணர்வுடனும் காணப்படுகிறேன். பயிற்சியாளர் மகேந்திரனுக்கு எனது வணக்கங்கள்.
10 நாள் தியானப் பயிற்சி இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ற வகையில் எளிமையானதாகவும் நேரடியாக எனது தினசரி வாழ்வில் நல்மாற்றங்களை தந்தது.
பின்பற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் எளிய வகையில் தியான முறைகளை கற்பித்தார் பயிற்சியாளர். மீளாய்வு, மதிப்புரைகள் மூலம் கற்ற தியான முறைகளை நன்கு அறிந்து கொண்டேன்.
ஆனா பானா சதி, விபாசனா தியானமுறை எனது உணர்வு நிலைகளில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியது. பெரும் தத்துவங்களை எளிமையாக புரிய வைத்தார் பயிற்சியாளர்
அன்புடையீர்
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
சிறுவயதிலிருந்தே எனக்கு உள்நோக்கிய தேடல் இருந்து வந்தாலும், நான் தனிப்பட்ட முறையில் எவ்வித தியானப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்ள அவசியம் ஏற்பட்டதில்லை. அதற்கு என் குடும்பச் சூழல் மற்றும் வாழ்வியல் முறையே காரணம்.
ஆனால் 2017 ஆம் ஆண்டு இசை நெறியாள்கை பற்றிக் கற்றுக் கொள்வதற்காக சென்னையில் தங்கியிருந்த தருணத்தில் அங்கு பயின்று கொண்டிருந்த பல மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நானும் 10 நாட்கள் விபாசன பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.
அந்த பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வந்த தருணத்தில் நான் எண்ணியது இது ஒன்று தான். இத்தகைய எளிய மற்றும் வாழ்விற்கு பெரிதும் பயன்படும் பயிற்சி ஏன் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது?
அதனை அனைவரும் கற்றுக் கொள்ள தொடர்ந்து நான் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டேன். அதன் விளைவு, 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி செய்வதோடு பலரும் கற்றுக் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறேன். இந்தப் பயணத்தில் மிக முக்கியத் திருப்பமாக இருந்தது கொரோனாக் காலம். அந்த கால கட்டத்தில் தான் முதன் முதலாக Zoom இணைய வழியாக பயிற்சிகளைக் கொடுக்கத் துவங்கினேன். அதன் மூலமாக பலன் பெற்றவர்களின் அனுபவங்களை அறிந்து தொடர்ந்து தியானப் பயிற்சி வகுப்புகளை இணைய வழியாக வழங்கி வருகிறேன். அந்த முயற்சியின் மூலமாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதுவரை பல நூறு மக்களுக்கு பயிற்சி வழங்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து முன்னெடுத்து சென்று வருகிறேன். சமூக நல்மாற்றத்திற்கான இந்த முயற்சியில் உங்களோடு இணைந்து பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாருங்கள் பயிற்சி வகுப்பில் சந்திப்போம்.
உங்களின் முக்கியக் கேள்விகளுக்கான பதில்கள் இங்கே உள்ளன. மேலும் கேள்விகள் இருந்தால் எங்களது வாட்ச் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த உடனே நீங்கள் பயிற்சி வகுப்பினை பார்த்து கற்க துவங்கலாம்.
தியான முறைகளைக் கற்று தங்கள் வாழ்வியலை மேம்படுத்த விரும்பும் அனைவரும் இந்த பதிவு செய்யப்பட்ட தியானப் பயிற்சி வகுப்பில் இணையலாம்.
3 நாள் தியானப் பயிற்சி வகுப்பு இணைய வழியில் கற்பவர்களுக்காக 5 நாளில் கற்கும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
எந்த இடத்தில் இருந்தும், அவர்களுக்கு உகந்த நேரத்தில் கற்கும் வகையில் ஆண்ட்ராய்டு, ஆப்பில் iOS செயலிகள் உள்ளன. பதிவு செய்த உடன் அதற்கான தகவல்கள் உங்களுக்கு பகிரப்படும்.
ஆம். நீங்கள் பதிவு செய்யப் பயன்படுத்திய அதே தகவல்களைப் பயன்படுத்தி இணைய தள முகவரி வழியாக கற்கலாம்.
உங்களுக்கு பயிற்சியின் போதும் பயிற்சி வகுப்பிற்கு பிறகும் தோன்றும் கேள்விகளுக்கான பதிலைப் பெற பல்வேறு வழிமுறைகளை உருவாக்கி உள்ளோம். அதில் ஒன்று நீங்கள் கூட்டுத் தியானப் பயிற்சியில் கலந்து கொண்டு கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெறலாம். கூகுள் படிவம் மூலம், நமது மொபைல் செயலி மூலம் என பல வழிகளில் பதில் பெற்றுக் கொள்ளலாம்.
எப்பொழுதெல்லாம் உங்களுக்கு வழிகாட்டலோடு பயிற்சி செய்ய விருப்பம் உள்ளதோ, அப்போதெல்லாம் இந்த பயிற்சியினை பதிவு செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.
எங்களை தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்து தகவல்களும் நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். பதிவு செய்தவர்களுக்கான சிறப்பு வாட்ச் அப் குழுவும் செயல்படுகிறது.
இலவச பயிற்சி வகுப்புகள் இணையவழியில் ஜூம் மூலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பதிவு செய்யப்பட்ட வகுப்புகளை நீங்கள் நினைத்த நேரத்தில் இருக்கும் இடத்தில் இருந்து கற்க வழி செய்ய பல்வேறு செலவுகள் இருக்கின்றன. அவற்றை ஈடு செய்யவே இந்த குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.